January 22, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்து இளவரசி யூஜெனிக்கும், அவருடைய நீண்ட நாள் காதலர், ஜாக் ப்ரூக்ஸ்பேங்குடன் நிச்சயதார்த்தம் இன்று(ஜன 22) நடைபெற்றது.
இங்கிலாந்து நாட்டின் இளவரசி யூஜெனி(27), இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், இளவரசர் அண்ட்ருவ்வின் இரண்டாவது மகளும் ஆவார். இங்கிலாந்து அரியணை வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். யூஜெனிக்கும் அவருடைய நீண்ட நாள் காதலரான ஜாக் புரூக்ஸ்ஸுக்கும் நிச்சயதார்த்தம் இன்று நடைப்பெற்றது.இங்கிலாந்தில் உள்ள புனித ஜார்ஜ் கோவிலில் இவர்களது திருமணம் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.