• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ் வித்தியாசமான பள்ளியில் சேர்ப்பு

March 25, 2017 தண்டோரா குழு

நெருங்கிய நண்பர்கள் இருக்ககூடாது என்னும் கட்டளையை கொண்ட தனியார் ஆரம்ப பள்ளியில் இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் இளவரசி கத்தரின் தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் ஜார்ஜ். தற்போது மூன்று வயது நிரம்பிய மகனை பள்ளியில் சேர்க்க அவனுடைய பெற்றோர்கள் விருப்பப்பட்டனர். அதன்படி, “அன்பாக இருக்கவேண்டும்” என்ற முதல் கட்டளையும் மாணவர்களுக்கு “நெருங்கிய நண்பர்கள் இருக்ககூடாது” என்ற இரண்டாவது கட்டளையைக் கொண்ட “தாமஸ் பாட்டர்சீ” என்னும் தனியார் ஆரம்ப பள்ளியில் சேர்க்கவுள்ளனர்.

அப்பள்ளி அரச குடும்பத்தினர் வசிக்கும் கென்சிங்டன் அரண்மனையிலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. ஒரு ஆண்டிற்கு கல்வி செலவு 6,11௦ பவுண்ட் அதாவது இந்திய மதிப்புபடி, 4,98,125 ரூபாய் ஆகும்.

கென்சிங்டன் அரண்மனையின் அதிகாரபூர்வமான ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,

“இவ்வண்டு செப்டம்பர் மாதத்தில் இளவரசர் ஜார்ஜ் அப்பள்ளியில் சேர்வார்” என்று வெளியிட்டது.

அப்பள்ளி 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்பள்ளியில் சுமார் 540 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். “ஓய்வில்லாத, செழித்தோங்கும், குறிக்கோளுடன் விளங்கும் பள்ளி” என்று அதன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மாணவர்களுடைய நலன் மீது அதிக முக்கியத்துவம் தருகிறது. மாணவர்களின் உணர்ச்சி பதில்களை கண்காணிக்க ‘மனித சூழலியல்’ முறையை அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.

மற்ற மாணவர்கள் ஒதுக்கப்படுவர் மற்றும் மனதளவில் காயப்படுவர், அனைவருடனும் சகஜமாக பழக வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, நெருங்கிய நண்பர்கள் வைத்திருக்க கூடாது என்ற கட்டளை உண்டு. வலுவான கல்வி முடிவுகளை கொண்ட பள்ளியும் கூட. உயர் பொது பள்ளிகளான ப்ரின்ஸ்டன், மார்ல் பொரௌக்ஹ, மற்றும் பிராட்பீல்ட் ஆகிய பள்ளிகளுக்கு அனுப்படுகின்றனர். விளையாட்டு, வீரம், மற்றும் நாடகம் தயாரிப்பதில் அப்பள்ளி சிறந்து விளங்குகிறது.

ஜார்ஜின் பெற்றோர் கூறுகையில்,

“வெற்றிக்கரமான படிப்பின் தொடக்கத்தையும், அவனுக்கு மகிழ்ச்சியையும் தரும் பள்ளி கிடைத்தது அவர்களுக்கு தைரியமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

அரியணை வரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும் இளவரசர் ஜார்ஜ், இங்கிலாந்திலுள்ள நோர்போல்க் என்னும் இடத்திலுள்ள வெஸ்ட்ஏகர் மொண்டிசொர்ரி பள்ளியின் சிறுவர் பள்ளியில் கல்வி பயின்று வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க