மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து விமானத்தில் ஏற முயன்றவரை மும்பை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த சையதுகானின் உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து ஹைதராபாதுக்கு செல்ல விமான டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அவரால் பயணம் செய்ய முடியவில்லை. இதை அறிந்த சையதுகான், விமானடிக்கெட் வாங்க செலுத்திய பணம் வீணாக போகாமல் இருக்க, அந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி ஹைதராபாத் செல்ல திட்டமிட்டார்.
இதனையடுத்து,சையதுகான் உறவினரின் ஆதார் அட்டையிலிருந்த புகைப்படத்தின் மேல், தன்னுடைய புகைப்படத்தை ஓட்டியுள்ளார். அந்த ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
விமானம் ஏறுவதற்கு முன்,டிக்கெட்டும் ஆதார் அட்டையும் சரிபார்க்கப்பட்டது.அதை சரிப்பார்த்த அதிகாரிகள் அந்த ஆதார் அட்டையில் புகைப்படத்திற்கு மேல் சையதுகானின் புகைப்படத்தை ஓட்டியிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி ஆகிய குற்றங்களுக்காக மும்பை விமான காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது