March 5, 2018
தண்டோரா குழு
ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நிறுத்தப்படும். சில நேரங்களில் நீண்டநேரமாக போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் சென்றபோது ஒருமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு,ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது.ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்கள் செல்லும்போது போலீஸ் இதனை பின்பற்றுவார்கள் என நம்புகிறோம் .
மேலும், இந்த வழக்கில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட முடியாது எனக்கூறி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.