• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநரை மாற்றினாலும், ஆட்சியை கலைக்க முடியாது – விசிக தலைவர் திருமாவளவன்

September 11, 2021 தண்டோரா குழு

இமானுவேல் சேகரன் நினைவுநாள் நாளையொட்டி, சென்னை அசோக்நகரில் அவரது படத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“இம்மானுவேல் சேகரன் சமூக நீதிக்காக போராடியவர். அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவியை திரும்பப் பெற வேண்டும். உளவுத்துறையில் பணியாற்றவரை தமிழ்நாட்டுக்கு மாற்றம் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் 25 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு எதிராக போராடும் பா.ஜ.க வுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. திராவிட கட்சியை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து நிறைவேறாது.

ஆளுநரை மாற்றினாலும், ஆட்சியை கலைக்க முடியாது. திமுக பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கிறது, மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.

மேலும் படிக்க