July 20, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.அதன் பின் பெரிதாக அரசியலில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.இதற்கிடையில்,சமீபத்தில் திமுகவில் உண்மை தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அழகிரி,ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்நிலையில்,மு.க.அழகிரி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது அரசியல் குறித்து என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த மு.க.அழகிரி 6 மாதம் கழித்து அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என கூறினார்.