• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.டி.ஓ.விற்கு லஞ்சம் கொடுக்க கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எதிரொலி – இணை ஆணையர் விசாரணை

November 20, 2017

கோவையில் இரு சக்கர வாகன பதிவிற்கு ஆர்.டி.ஓ.விற்கு லஞ்சமாக கொடுக்க கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பாக வட்டார போக்குவரத்து இணை ஆணையர் நேரடி விசாரணை நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் அங்கேரிப்பாளையத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் கடந்த ஜூன் மாதம் தனியார் நிறுவனத்தில் ஸ்கூட்டர் முன் பணமாக ரூ.21ஆயிரத்து 549 செலுத்தி மீதித்தொகையை தவணை முறையில் செலுத்த ஏற்பாடு செய்து வாகனத்தை வாங்கியுள்ளார். அப்போது, வாகன காப்பீடு, சாலைவரி, பதிவு கட்டணம் என்று கூறி ரூ.ஆயிரத்து 791 கூடுதலாக கேட்கப்பட்ட தொகை குறித்து ஷோருமில் விளக்கம் கேட்டபோது, வாகன பதிவு செய்யும்போது ஆர்.டி.ஓ., அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று பதிலளித்துள்ளனர். பணத்தை தர மறுத்ததால் ஸ்கூட்டருக்கு பதிவெண் வாங்கி தராமல் ஷோரும் நிர்வாகம் இழுத்தடித்ததால் நாகராஜன், அவருடைய நண்பரும், சமூக ஆர்வலருமான பழனிக்குமார், திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ.விடம் புகார் தெரிவித்தனர்.

ஆனால், அவரும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை போக்குவரத்து ஆணையருக்கு புகார் தெரிவித்தனர். சென்னை போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்படி, கோவை போக்குவரத்து இணை ஆணையர் முருகானந்தம், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார்தாரரான நாகராஜன், பழனிக்குமார் மற்றும் குற்றச்சாட்டப்பட்டவரான திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ.சிவகுருநாதன் ஆகியோரிடம் தனி தனியார் விசாரணை நடத்தினர்.

கடந்த 3 முறை விசாரணை அழைப்பாணை அனுப்பப்பட்டு தற்போது தான் இணை ஆணையர் விசாரணை நடத்தியுள்ளதாகவும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தங்களுக்கு இதுபோன்ற சட்டவிரோத பணம் வசூல் பொருளாதாரமாக மட்டுமின்றி மன உளைச்சலும் ஏற்படுத்துவதாக கூறும் பாதிக்கப்பட்டவர், முதல் வாகனத்தை வாங்கியும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.

மேலும் படிக்க