January 31, 2018
தண்டோரா குழு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த சுமார் ரூ.3.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி கடந்த மாதம் டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைதேர்தல் நடைப்பெற்றது.இந்த தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டிடிவி தினகரன், உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர்.இந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில்,வழக்கமாக ஒரு இடைத்தேர்தல் நடத்த சுமார் 70 லட்சம் வரை செலவாகும்.ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ரூ.3.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இது வழக்கத்தைவிட 3 மடங்கு கூடுதல் செலவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.