• Download mobile app
17 Jan 2026, SaturdayEdition - 3629
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஓபிஎஸ் அணி பரப்புரை

April 6, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஓபிஎஸ் அணி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக(அம்மா ) அணி சார்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதைபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியின் அதிமுக (புரட்சி தலைவி அம்மா ) அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அதைபோல் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். இதையடுத்து, ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு ஏற்ப வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்த ஓபிஎஸ் அணி ஆர்.கே நகரில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கடையில், அழகு தமிழ்செல்வி மற்றும் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்
ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குபேட் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது, ஜெயலலிதா இறுதி ஊர்வலத்தின் போது பச்சை புடவை உடுத்தி, தேசிய கோடி போர்த்தியிருந்த மாதிரி எப்படி ராஜாஜி ஹாலில் வைக்கபட்டிருந்தாரோ அதே போன்று அவர்களது வாகனத்திலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து பரப்புரை மேற்கொண்டனர்.

ஏற்கனவே ஜெயலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிவந்த ஒபிஎஸ் அணி தற்போது அவரது உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து பரப்புரை மேற்கொண்டு வருவது அனுதாப ஓட்டை வாங்க முயற்சிப்பது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிகின்றனர்.

மேலும் படிக்க