July 9, 2021
தண்டோரா குழு
ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவைகள் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை வர்த்தக பகுதி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் கே.எஸ்.வெங்கட சுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் கோயம்புத்தூர் வர்த்தக பகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் சிம் கார்டு, ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல். சேவைகளை விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் தெரிவிக்க விண்ணப்பங்கள் வரும் ஜூலை 23-ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள், விண்ணப்ப சந்தேகங்களுக்கு 0422-2457400 அல்லது 8903418128 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.