• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர்சந்தை, வெள்ளலூர் வாரசந்தையில் 32 மின்னணு தராசுகள் பறிமுதல்

March 29, 2023 தண்டோரா குழு

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் இணைந்து இம்மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள்விதிகள் தொடர்பாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கூறியிருப்பதாவது:

கோவை ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர்சந்தை மற்றும் வெள்ளலூர் வாரசந்தையில் உள்ள காய்கறி, பழம் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் 42 ஆய்வுகள் மேற்கொண்டதில் 32 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது போன்ற ஆய்வுகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.

எனவே அனைந்து சந்தைகளிலும் இதுவரை அரசிடம் உரிய தொகை செலுத்தி ஓராண்டிற்குள்
முத்திரையிடப்படாமல் பயன்படுத்தி வரும் எடையளவுகளை டாக்டர் பாலசுந்தரம் ரோடு ஆர்.டி.ஒ. அலுவலகம் பின்புறம் உள்ள சம்பந்தப்பட்ட முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ளவேண்டும்.பயன்படுத்த இயலாத நீண்ட ஆண்டுகள் முத்திரையிடாமல் உள்ள
எடையளவுகளை கழித்துவிட்டு புதிய எடையளவுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரை யிடப்படாமல் இருந்தால் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க