• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக போராட்டம்

June 3, 2021 தண்டோரா குழு

ஜூன் 3 கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய கோரி கோவையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு முன் விடுதலை திட்டத்தை 1994ல் கொண்டு வந்தது. எவ்வளவு பெரிய குற்றங்களை செய்தவர்களாக இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் அவர்களை முன் விடுதலை செய்ய முடியும். அண்ணா பிறந்தநாள், அண்ணா நூற்றாண்டு, எம்ஜிஆர் நூற்றாண்டு, செம்மொழி மாநாடு, என பல நிகழ்வுகளில் பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், முஸ்லிம் சிறைவாசிகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை என்ற கூறப்படுகிறது.

தமிழக சிறைகளில் 47 முஸ்லிம் சிறைவாசிகள் இருபது ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பத்தாண்டுகளை கடந்த சிறையில் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மேலும் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கோவை மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளியுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M.I.அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில பொருளாளர் T.M.இப்ராஹிம் பாதுஷா, பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மண்டல தலைவர் A.அன்வர் உசேன் பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட செயலாளர்கள் A.அப்துர் ரஹ்மான் மற்றும் K.முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க