March 31, 2020
தண்டோரா குழு
கோவை துடியலூர் பகுதியில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அரிசி,கோதுமை மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினார்.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன. முக்கிய தொழில் நகரமான கோவையில் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் 26 வது வார்டு பகுதியில் சுமார் 700 கிலோ அரிசி மற்றும் கோதுமையை அந்த பகுதியில. வசிக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி வழங்கினார். தொடர்ந்து கோவை கேட்டரிங் அசோசியேசன் சங்கம் சார்பாக ஆயிரம் பேர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி கூறுகையில்,
தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அதே போல வெளியூர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.