December 21, 2020
தண்டோரா குழு
தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் துடைப்ப யாத்திரை குழுவினர் கோவையில் பிரச்சாரத்தை நடத்தினர்.
அப்போது தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கினைப்பாளர் வசீகரன் பேசுகையில்,
ஆம் ஆத்மி கட்சி கடந்த 13 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நேர்மையானவர்களை , ஊழலற்றவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பது குறித்து பிரசாரம் செய்து வருகிறோம். கொரோனா நேரத்தில் மக்களுக்கு உதவாமல், தற்போது பொங்கல் பரிசாக ரு .2500 அறிவித்துள்ளது,தேர்தலை வைத்து உள்நோக்கத்துடன் செயல்படுவது போன்று உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக ஆம் ஆத்மி கட்சியின் செயலாளர் ஜோசப்ராஜ், மகளிரணி தலைவி ஸ்டெல்லா, தமிழக ஆம்ஆத்மி கட்சியின் கோவை வேட்பாளர் தேர்வு கமிட்டி தலைவர் சார்லஸ் அந்தோணி, தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் ஆன்டோ , மஞ்சூர்,
பொருளாளர் சீனிவாச சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.