January 22, 2021
தண்டோரா குழு
நாட்டின் முன்னணி எஃப்எம்சிஜி நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா, அதன் புதிய கண்டுபிடிப்பான ஆம்வே ஹோம் ஃபுரூட் & வெஜ்ஜி வாஷ் என்ற வீட்டுப் பராமரிப்பு வகையின் அறிமுகத்தை அறிவித்தது.
அதன் வீட்டுப் பராமரிப்புத் தீர்வுகளின் அடிப்படையிலான நிபுணத்துவத்தைக் கொண்டும் சுகாதாரப் பராமரிப்புப் பொருட்களின் தேவையை நிறைவுசெய்வதற்காகவும் உருவாக்கப்பட்ட இதன் அறிமுகத்தின் மூலம் ஆம்வே காய்கறி மற்றும் பழவகை சுகாதார துறைக்குள் நுழைந்துள்ளது. ஆம்வே ஹோம் ஃபுரூட் & வெஜ்ஜி வாஷ் என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான 1 இல் 5 சுத்திகரிப்புத் தீர்வாகும். இந்த சுத்திகரிப்புத் தீர்வில் குளோரின், பிளீச், ஆல்கஹால், செயற்கை நிறம் அல்லது விலங்கு அடிப்படையிலான பொருட்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இது 197 பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக அறிவியல் ரீதியான ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மேற்பரப்புக் கிருமிகள் (பாக்டீரியா மற்றும் பூஞ்சை), மேற்பரப்பு பூச்சிக்கொல்லிகள், மெழுகுகள், மேற்பரப்பு கன உலோகங்களுடன் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களின் அழுக்கு மற்றும் தூசியுடன் எந்த எச்சத்தையும் விடாமல் இது அகற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆம்வே இந்தியாவின் சிஇஓ,அன்ஷு புத்ராஜா, இந்த அறிமுகத்தைப் பற்றிக் கூறும்போது,
“நுகர்வோருக்கு சிறந்த வீட்டு சுகாதாரம் தேவைப்படுவதாலும், அதிகரித்துவரும் வருவாய் மற்றும் நகரமயமாதலோடு சேர்ந்து அதிகரித்த தயாரிப்புகளின் ஊடுருவலாலும் சமீப ஆண்டுகளில் வீட்டுப் பராமரிப்புப் பொருள் வகைகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. தற்போதைய சூழலின் காரணமாக, நுகர்வோர் மேலும் அதிகமாக சுகாதார உணர்வுள்ளவர்களாக மாறியுள்ளனர். மேலும் நாங்கள் நுகர்வோர் நடத்தையிலும் நுகர்வு வகையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கவனித்து வருகிறோம். சுகாதாரப் பராமரிப்பின் மேல் ஏற்பட்டுள்ள திடீர் அக்கறையினால் வீட்டு சுகாதாரம் என்பது அதிகபட்ச முன்னுரிமைகளில் ஒன்றாக மாறியுள்ளது. மிக உயர்ந்த தரத்தையும் பல்துறை தயாரிப்புகளையும் வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, நாங்கள் ஆம்வே ஹோம்TM ஃபுரூட் & வெஜ்ஜி வாஷை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தத் தயாரிப்பில் இயற்கையில் இருந்து பெறப்பட்ட தீங்கு விளைவிக்காத எச்சங்கள் இல்லாத சுத்திகரிப்புப் பொருட்கள் உள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டுப் பராமரிப்புத் தீர்வுகளை உருவாக்குவதில் ஆம்வேயின் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தின் அடிப்படையிலான இந்தக் கண்டுபிடிப்பு, சுகாதாரத் தயாரிப்புப் பொருட்களுக்கான எங்கள் நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவையை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்.
ஆம்வே ஹோம் ஃபுரூட் & வெஜ்ஜி வாஷின் விலை 500 மி.லிட்டருக்கு ரூபாய் 249.00 மட்டுமே. இது ஆம்வே நேரடி சில்லறை விற்பனையாளர்கள்/ஆம்வே நேரடி விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.