• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் தொலைக்காட்சி தொடக்கம்

May 20, 2017 தண்டோரா குழு

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளது. உலகம் முழுவதும் ஊடகத்துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், ஆணாதிக்கம் நிறைந்த ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் மட்டுமே ஊழியர்களாகக் பணியாற்றும் தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

‘ZAN TV’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த தொலைகாட்சியில் பெண்கள் மட்டுமே முழுக்க முழுக்க பணியாற்றுகின்றனர். பெண் தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் என 50க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இது குறித்து ‘ZAN தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணியாற்றும் 20 வயதான காதிரா அஹ்மடிகூறுகையில்,

இந்த தொலைக்காட்சியில் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் எங்கள் சமூகத்தில் பெண்கள் தங்கள் உரிமைகள் பற்றி அறிந்திருக்கவில்லை,”எனவே இந்த நிலையம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பெண்களின் குரலை உயர்த்துவதற்காக நாங்கள் வேலை செய்கிறோம், இதன் மூலம் அவர்களது உரிமைகளை பாதுகாக்க முடியும்”என கூறியுள்ளார்.

பெண்கள் சமமாக நடத்தப்படாத ஒரு நாட்டில் பெண்கள் மட்டுமே வேலை பார்க்கும் இந்த புதிய தொலைக்காட்சிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.ஆஃப்கானில் உள்ள 40 தொலைக்காட்சி நிறுவனங்கள் இருந்தாலும் தனித்துவமாக ‘ZAN’ டிவி திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க