• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆபத்தை ஏற்படுத்தும் ஏர் ஹாரன்கள்!

May 28, 2018

சாலையில் பயணம் செய்யும் ஒவ்வொரு மனிதரும் மேற்கொள்ளும் மிக பெரிய சவால் சாலை நெரிசல்.சாலை நெரிசலின் போது வாகனங்களின் வருகையை எச்சரிக்கவும்,நிற்கும் வாகனங்கள் புறப்பட தயாராக போகிறது என்பதை தெரிவிக்கவும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது.அதிக சத்தத்தை வெளியிடும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அரசு வாகனங்கள்,தனியார் வாகனங்கள்,மற்றும் இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதனால் மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும்,விலங்கினங்களும் பாதிப்படைகின்றனர்.குறிப்பாக தனியார் வாகன ஓட்டுநர்கள் வேகமாக செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் விவேகத்தை இழக்கின்றனர்.ஏர் ஹாரன்கள் பல விதமான ஒலியையும்,அதிக சத்தத்தையும் தருவதால் வாகன ஓட்டிகள் இதனையே பெரிதும் உபயோகிக்கின்றனர்.அதிக சத்தத்தை கேட்பதால் செவிப்பறை பழுதடைகிறது.இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஏர்ஹாரனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதையும் மீறி சிலர் இதனை பயன்படுத்திவருகின்றனர்.

சாலைவிதிகளின் படி மருத்துவமனை மற்றும் பள்ளிகள் முன்பாக அதிக ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகனங்கள் சட்டம்,1899 படி எந்த சட்டம் ஓட்டுனர்கள், நடத்துனர்களின் உரிமம் தொடர்பான சட்ட விதிகள்,மோட்டார் வாகனங்கள்,போக்குவரத்து கட்டுப்பாடு,காப்பீடு,குற்றங்கள் இவைகளில் அடங்கும்.அதிக ஒலி எழுப்பும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.ஆனால் காவல் துறையினர் அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது.இவ்வகையான சட்டங்கள் காகிதத்தில் எழுதி வைக்கப்பட்ட எழுத்துக்களாக மட்டும் ஆகிவிட்டனர்.

அரசு மருத்துவமனை மற்றும் அரசு பள்ளிகள் என்றால் அனைவருக்கும் அலட்சியம்.கோவை அரசு மருத்துவமனை திருச்சி சாலையில் அமைந்துள்ளது.அங்கு மக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஒரு வாகனத்தை முந்திச்சென்று,பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லவே இது போன்ற ஒலி எழுப்பிகள் பயன்படுகின்றன.பேருந்தை ஒட்டியே மருத்துவமனையும் உள்ளது.தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.இவ்வாறு அதிக ஒலி எழுப்புவதால் அங்குள்ள நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் காது,மூக்கு மற்றும் தொண்டை பற்றி பயிலும் பி.ஜி மருத்துவ மாணவி வினிதா கூறுகையில்,

“மருத்துவமனை என்பது மிகவும் அமைதியான ஆகும்.பல விதமான நோயாளிகள் தங்கிருப்பதாகவும் கூறினார்.பொதுவாக மனிதர்களால் 80டெசிபல் வரை மட்டும் சுலபமாக கேட்க முடியும் என்றும் அதற்கு மேல் அந்த ஒலியை தொடர்ந்து கேட்பதால் காது நரம்புகள் பாதிப்படைய வாப்புள்ளதாகவும் கூறினார்.நோயாளிகள் மட்டுமல்லாமல் சாதாரண மனிதர்களும் இதனை தொடர்ந்து கேட்பதால் செவில் உள்ள உணர்சிமிக்க நரம்புகள் பாதிப்படைவதாகவும்,மேலும் தலைவலி,மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கூறினார்.

மேலும் இருதய நோயாளிகள்,குழந்தைகள்,மற்றும் முதியவர்கள் போன்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இருதய நோயாளிகள் அடிக்கடி அதிக சத்தத்தை கேட்பதால் அவர்களுக்கு இருதய கோளாறுகள் ஏட்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.மேலும்,பேருந்து நிலையத்தை ஒட்டியே மருத்துவமனை இருப்பதால் அதிக இரைச்சல் வருகிறது.இங்கு தங்கியிருக்கும் நோயாளிகளின் நலனை சிறிதும் எண்ணாமல்,அவர்களின் இலாப நோக்கத்திற்காக வண்டியை மிக வேகமாக ஓட்டி செல்வது எவ்விதத்தில் நியமாகும்”.

இது குறித்து ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூறும் போது,

“சாலைகளில் வாகனங்களை ஓட்டிச்செல்வது மிகவும் கடினமான வேலை என்றும்,கூட்ட நெரிசலின் போது ஓட்டுநர்கள் ஏர் ஹாரன்களை விடாமல் அடிப்பதால் மற்றவர்களுக்கு பதற்றம் ஏற்படுவதாகவும் கூறினார்.இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையைினரும் சேர்த்து கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.பேருந்து மட்டுமல்லாமல்,இருசக்கர வாகனங்களிலும் பைப் ஹாரன் பயன்படுத்தி ஒலி இரைச்சல் ஏற்படுகிறது.இவ்வாறு அதிக இரைச்சல் ஏற்படுவதல் சுற்றுசுழல் மாசுபடுவதாகவும் புகார் தெரிவித்தார்”.

“சட்டங்கள் வலிமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும்” அரசாங்கம் பொது மக்களின் நலன் கருதி சட்டத்தை மீறி ஏர் ஹாரன்களை பயன்படுத்தும் பேருந்தின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும்.நோயாளிகளின் நலனை பாதுகாக்க காவல் துறையினர்,சட்டத்தை மீறும் அனைத்து பேருந்து ஓட்டுனர்களையும் தண்டிக்க வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க