January 9, 2021
தண்டோரா குழு
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவையை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய இவர், மற்ற இணைய சூதாட்டங்களிலும் ஈடுபட்டு பணம் சம்பாதித்து இருக்கின்றார்.அது அவருக்கு ஆர்வத்தை தூண்டவே தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிய அவர், ஏராளமான பணத்தை இழந்துவிட்டார். இதனையடுத்து இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என கடன் வாங்கி தொடர்ந்து விளையாடியும் தோல்வியே கிடைத்துள்ளது.இதனால் விரக்தி அடைந்த எல்வின் பிரட்ரிக் மன உளைச்சல் ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.