November 5, 2020
தண்டோரா குழு
ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
நீலகிரி, திருப்பூரில் கொரோனா பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை விமான நிலையத்தில்
செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ,
கோவை மாவட்ட மக்கள் வைத்த
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக்
கொண்டு இருக்கிறது.உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன
அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் ரூ.1100 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை காந்திரபுரத்தில் இரண்டுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் வகையில் விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்!”