• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார் எண் அவசியம

March 3, 2017 தண்டோரா குழு

ஆள்மாறாட்டம், மோசடி, லட்சக்கணக்கான ரயில்வே டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் விற்பனை செய்வது போன்றவற்றை தடுக்க ஆதார் அடிப்படையிலான ஆன்லைன் டிக்கெட் முறையை நோக்கி இந்திய ரயில்வே விரைவில் செல்லவுள்ளது.

2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கான சலுகை திட்டதிற்கு ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்கான 3 மாத சோதனை தற்போது நடந்துக்கொண்டு வருகிறது.

2017 –2018-ம் ஆண்டிற்கான புதிய வணிக திட்டத்தை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை(மார்ச் 2) வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“ஆதார் சார்ந்த டிக்கெட் முறை மற்றும் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டு, பணமில்லா டிக்கெட் முறை நோக்கி இந்திய ரயில்வே செல்லும். பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஒருங்கிணைந்த “டிக்கெட் ஆப்” மே மாதம் தொடங்கவுள்ளது”என்றார்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(IRCTC) இணைய தளம் மூலம் டிக்கெட் எடுப்பவர்கள், ஒரே ஒரு முறை பதிவு செய்யும் ஆதார் பதிவு எண் தேவை. போலி அடையாளங்களை கொண்டு இணைய தளத்தில் பதிவு செய்து, மொத்தமாக டிக்கெட்டுகளை எடுத்து, அதை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

இவர்களை போன்றவர்களை கட்டுப்படுத்த தான் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இவர்களால் இந்திய ரயில்வே துறைக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த நோக்கத்தை செயல்படுத்த மென்பொருள் ஒன்றை தயார் செய்து வருகிறோம்” என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க