March 10, 2018
தண்டோரா குழு
ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் : ரஜினியின் இமயமலை பயணம் பற்றி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அரசியல் பிரவேசம் எடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு சென்றார். அங்கு 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.