September 2, 2021
தண்டோரா குழு
கோவை பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், வால்பாறையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா தளங்கள்,குரங்கு நீர் வீழ்ச்சி ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை அமலில் இருந்தது.
இதற்கிடையில், தமிழக அரசின் ஒப்புதலோடு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.அதே சமயத்தில் டாப்ஸ்லிப்பில் சுற்றுலா பயணிகள் டிரக்கிங், யானை சவாரிகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கொரோனா மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற கோரியும் அறிவுறுத்தப்படுகிறது.