• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆனைகட்டி பனப்பள்ளியில் தேடப்பட்ட ஆண் யானை தென்பட்டது

August 30, 2022 தண்டோரா குழு

கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை சில நாட்களாக தேடி வந்த நிலையில், ஆனைகட்டி பனப்பள்ளி அருகே யானை தென்பட்டது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே, கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் இரு மாநிலங்களுக்கு இடையான எல்லைப்பகுதியில் ஆண் யானை ஒன்று கடந்த 15-ம் தேதி தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க துவங்கினர். யானை உடல் மெலிந்து காணப்பட்டது.

யானை கண்காணிப்பு பணியில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக ஊழியர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த ஊழியர்கள் குழுவாக ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை கேரளா மாநிலம் அட்டப்பாடி சரகத்தின் கீழ் உள்ள தாசனூர் மேடு பகுதிக்கு சென்றது. இதையடுத்து, கேரள வன அலுவலர்களுடன் தகவல்களை பகிர்ந்து கோவை வன ஊழியர்கள் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். யானையை கண்டறிய டிரோன் கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், யானையை கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து, யானை தேடும் பணியில் தமிழக, கேரள வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, அன்மையில் ஆனைகட்டி பகுதியில் உள்ள செங்குட்டை பகுதியில் யானை இருப்பது உறுதி செய்யப்பட்டது. யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், யானை செங்குட்டையில் இருந்து வேறு பகுதிக்கு சென்றுள்ளது. இதனால், யானை கண்டறிய வனத்துறையினர் தனி தனி குழுவாக பிரிந்து வனத்திற்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

யானைக்கு பழங்களில் மாத்திரை, மருந்து வைத்து அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், யானையை பிடித்து சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி டாப்சிப் பகுதியில் இருந்து கும்கி யானை கலீம், முத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், முத்து, பொள்ளாச்சி பகுதியில் பிடிப்பட்ட அரிசி ராஜா என்ற யானை ஆகும். இந்த யானை கும்கியாக மாற்றப்பட்டு தற்போதுதான் முதல் முறையாக யானை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று தேடப்பட்ட வந்த ஆண் யானை ஆனைகட்டி பனப்பள்ளி பகுதியில் தென்பட்டது. தொடர்ந்து யானையை கண்காணித்த வனத்துறையினர் யானையின் வழித்தடத்தில் கிடைத்த சானியை சோதனை செய்தனர். அதில் வந்த முடிவுகளின்படி யானை ஆரோக்கியமாக உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து யானை கண்காணிப்பில் உள்ளது எனவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க