• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திராவில் 5 பேர் துணைமுதலமைச்சர்கள் – ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

June 7, 2019 தண்டோரா குழு

ஆந்திராவில் 5 பேர் துணை முதலமைச்சர்களாக நாளை பதவியேற்க உள்ளனர்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 171 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சுமார் 151 தொகுதிகளை கைப்பற்றி ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார்.

எனினும், ஆந்திர மாநில அமைச்சரவை உருவாகவில்லை.இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் புதிய திட்டங்கள், அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவது என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜெகன் ஆலோசனை செய்தார். கூட்டத்தின் இறுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளிட்டார்.

மேலும், இந்த கூட்டத்தில், 5 பேரை ஆந்திராவின் துணை முதலமைச்சர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ முகமது முஸ்தப்பா சாஹிப் தெரிவித்துள்ளார். பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் உள்ளிட்ட 5 வெவ்வேறு பிரிவில் இருந்து துணை முதலமைச்சர்களை நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும் படிக்க