• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதியோகி முன்பு குவிந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள்!

July 29, 2022 தண்டோரா குழு

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆதியோகி முன்பு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் பால் குடம் ஏந்தி வந்து பூஜை செய்தனர். இதில் போளுவாம்பட்டி, செம்மேடு, முட்டத்துவயல், கோட்டைக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக செம்மேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுமணி அவர்கள் கூறுகையில்

“சத்குரு அவர்கள் ஆதியோகி திருவுருவத்தை எங்களுடைய ஊரில் பிரதிஷ்டை செய்து இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆதியோகியை தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு ஒவ்வொரு அமாவாசையும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த மக்கள் பூஜை செய்வதற்கான வாய்ப்பை சத்குரு எங்களுக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில், ஆடி அமாவாசை தினமான இன்று எங்களுடைய ஊர் மக்கள், சிவ வாத்தியங்களுடன் பால் குடம் ஏந்தி வந்து யோகேஸ்வர லிங்கத்திற்கு பூஜை செய்துள்ளோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இதை மென்மேலும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான கனகராஜ் கூறுகையில்,

“இந்த அமாவாசை பூஜைக்கான செலவுகள் அனைத்தையும் எங்களுடைய சொந்த செலவிலேயே செய்துள்ளோம். மக்களுக்கு அன்னதானமும் வழங்குகிறோம். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஊர் திருவிழாவை போல் பங்கேற்றுள்ளோம். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கரகம் எடுப்பது, பச்சரிசி படையல் வைப்பது என முழு ஈடுப்பாட்டுடன் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த பூஜை எங்களுக்கும் ஈஷாவுக்குமான பிணைப்பை காட்டுகிறது” என்றார்.

பூஜையுடன் சேர்த்து சிலம்பாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்றது. இந்த அமாவாசை பூஜையானது கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க