• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதித்யா பிர்லா பேஷன் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தில் அனன்யா பிர்லா, விக்ரம் பிர்லா இயனக்குனர்களாக தேர்வு

February 1, 2023 தண்டோரா குழு

ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் பேஷன் ரீடெய்ல் நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில், இயக்குனர்களாக அனன்யா பிர்லா மற்றும் அர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோர் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தொழில் முனைப்பிலும் வணிக கட்டமைப்பிலும் சிறந்த அனுபவங்களை பெற்றுள்ளனர்.

இவர்களது புதிய யுக்தியாலும், திட்டமிடலும் இந்த நிறுவனத்துக்கு பயனளிக்கும் என நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

ஆதித்யா பிர்லா குழு தலைவர் குமாரமங்கலம் பிர்லா கூறுகையில்,

“இந்திய ஆயத்த ஆடை சந்தையில் உள்ள பல்வேறு வகையான ஆடை வகைகளில், ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் ஒரு வலிமையான இடத்தை பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம், புதிய துறைகளில் குறிப்பாக பாரம்பரிய உடைகள், இந்திய ஆடை வடிவமைப்புகள், சொகுசு மற்றும் விளையாட்டு துறைகளுக்கான ஆடைகளின் டிஜிட்டல் அமைப்பில் நுழைந்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் அபரிதமான வளர்ச்சியை அடைய திட்டமிட்டுள்ளது.

அனன்யா மற்றும் ஆர்யமான் ஆகியோரின் தனிப்பட்ட சாதனைகள், தனிப்பட்ட சுதந்திரமான தொழில் முனைப்பு ஆகியவற்றால் மாபெரும் பொறுப்புகளை வகிக்க முடியும். புதிய தலைமுறைகளின் வணிக மாதிரிகள் எதிர்காலத்திற்கான மாற்றமாகவும், புத்துணர்வு அளிப்பதாகவும் இருக்கும் என இந்த நிறுவனம் நம்புகிறது. இந்த குழுவின் ஆணித்தரமான மதிப்பீட்டிலும், கொள்கைகளிலும் இருவரும் இணைந்துள்ளனர். இந்த முழுமத்தின் தொழில் முனைப்பின் வளமையான பாரம்பரியம் மற்றும் வெற்றி பாதையில் மேலும் மதிப்புகளை வளர்ப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

அனன்யா பிர்லா மற்றும் ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோர் சமீபத்தில் ஆதித்யா பிர்லா மோலண்மை கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த அமைப்பு தான், ஆதித்யா பிர்லா குழுமத்தின் வணிகத்தின் போக்கை திட்டமிடுகிறது.

அனன்யா பிர்லா வெற்றிகரமான வணிகப் பெண் மற்றும் கலைகளில் ஈடுபாடு கொண்டவர். அவர் தனது 17 வயதில் துவக்கிய ஸ்வதந்திரா மைக்ரோபைன் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற நிறுவனமாக உள்ளது. இது 1 பில்லியன் டாலர் வளர்ச்சியை கடந்து ஆண்டு கூட்டு விகித வளர்ச்சியாக 120 சதம் (2015 – 2022) பெற்றது. 7000-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம், பணியாற்ற மிக உகந்ததாகவும் தேர்வு பெற்றுள்ளது. கிரிசில் நிறுவனத்தின் வி பிளஸ் தரத்தினையும், இளமையான, உயர்ந்த நிறுவனமாகவும் அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஸ்வதந்திரா வெற்றிகரமாகன மைக்ரோ ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தை 2018-ல் கையகப்படுத்தியது. இவரது புதுமையான வணிக மாடல், நிதி துறையில் ஒரு புதிய இடத்தை பெற்றுள்ளது. வீட்டு உள் அலங்காரத்தில் இகை அசை என்ற புதிய வடிவமைப்பையும் உருவாக்கியுள்ளார். இந்தியாவில் மனநலம் வேண்டுவோருக்காக எம்பவர் அமைப்பை உருவாக்குவதில் இணை நிறுவனர். மன நல ஆராய்ச்சி மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக அனன்யா பிர்லா பவுண்டேஷன் ஒன்றை நிறுவியுள்ளார்.

ஆர்யமான் விக்ரம் பிர்லா, பல்வேறு துறை அனுபவங்களை பெற்றராக உள்ளார். தொழில் முனைப்பு, முதலீடு மற்றும் விளையாட்டு துறையில் அனுபவம் பெற்றுள்ளார். ஆதித்யா குழுமத்தின் பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லாவின் ஆலோசனையுடன் வணிகத்தை புதிய முறைக்கு மாற்றியுள்ளார். டி2சி தளம், டிஎம்ஆர்டபிள்யு போன்றவைகளை உருவாக்கி அதில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

விருந்தோம்பல் வணிகத்திலும் புதிய தொழில்முனைவோராக மாறியுள்ளார். குழுமத்தின் முதலீட்டு நிதி திட்டத்தின் முன்னோடியாக செயல்பட்டுள்ளார். இந்த குழுமத்தில் இணைவதற்கு முன் ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக திகழ்ந்தார்.

மேலும் படிக்க