• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்

February 24, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலமாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வழியாக தோட்டக்கலை காய்கறி மற்றும் பழவகை சாகுபடி செய்ய எஸ்.சி பிரிவில் 70 நபர்கள், எஸ்.டி பிரிவில் 55 நபர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சியும், வனத்துறை வழியாக வேளாண் காடுகள் மற்றும் நர்சரி உருவாக்கி விற்பனை செய்ய எஸ்.சி 8 நபர்கள், எஸ்.டி 40 நபர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சியும் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை வழியாக வேளாண் பொறியியல் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் வேளாண்மை பொறியியல் துறை பழுது நீக்கம் செய்ய எஸ்.சி 80 நபர்கள், எஸ்.டி 50 நபர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சியும் நடத்த உத்திரவிட்டு நிதி ஒதுக்கீடும் வரப்பெற்றுள்ளது.

எனவே கோவை மாவட்டத்தை சார்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ள பெயர், முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண் குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட மேலாளர், தாட்கோ, டாக்டர்.பாலசுந்தரம் சாலை, கோவை-641018 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் ஏற்கனவே தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிகளும் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்கள் அறிய தாட்கோ அலுவலக தொலைபேசி எண்: 0422-2240111ல் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க