July 16, 2021
தண்டோரா குழு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில்,பழங்குடியின மக்களின் குறைகள் கேட்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு தொழில் புரிய சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம், டிஜிட்டல் பிரிண்டிங் ஆகியவை மானியத்துடனான கடனுதவியும்,இலவச வீட்டுமனை பட்டாக்கள் என ரூ36.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
இந்த நிகழ்வில், அரசு முதன்மை செயலாளர் மணிவாசன்,ஆதிதிராவிடர் நல ஆணையர் மதுமதி,தாட்கோ மேலாண் இயக்குனர் விவேகானந்தன், பழங்குடியின நல இயக்குனர் ராகுல், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராம்குமார், காவல்துறை துணைத்தலைவர் முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.