• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“ஆதாரம் இல்லாமல் வரும் செய்திகளை ஃபார்வேடு செய்யவேண்டாம்” – வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுரை

July 10, 2018 தண்டோரா குழு

வாட்ஸ்அப் வதந்திகளைத் தடுக்க அதனை பயன்படுத்தபவர்கள் என்ன செய்ய வேண்டும்? என அந்த நிறுவனமே சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

உலக அளவில் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி செயலி வாட்ஸ்அப். இதன் மூலம் நிறைய பயன்கள் இருந்தாலும் மறுபுறம் பொய்யான செய்திகள் அவ்வபோது பரவி வருகிறது. இந்த மெசேஜை 5 பேருக்கு ஃபார்வேடு செய்தால் பணம் கிடைக்கும்’, `இந்த குழந்தை உயிருக்கு போராடுகிறது உங்கள் ஃபார்வேடு குழந்தையின் உயிரை காப்பாற்றும்’, `சாலையில் விபத்து உடனடி ரத்தம் தேவை’ உள்ளிட்ட பல்வேறு மெசேஜ்கள் எப்போதுமே வாட்ஸ்அப்பில் உலாவி வந்து கொண்டுதான் இருகின்றன.இதில் எது உண்மை என தெரியாமல் பலரும் வாட்ஸ்அப்பில் வரும் இத்தகையை மெசேஜ்களின் ஃபார்வேடு செய்கின்றனர். இதன் மூலம் வதந்திகள் எளிதில் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது. குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வதந்திகளால் கொலைகள் நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் 10 சதவித அறிவுறுத்தல்களுடன் ஒருபக்க அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு தகவலை பார்வேர்டு செய்வதற்கு முன்பு அதன் உறுதித்தன்மையை உணர்தல் வேண்டும். பரிமாறப்படும் தகவலின் உண்மைத்தன்மையை அறிதல் வேண்டும், தகவல் மீது சந்தேகம் இருப்பின் அதனை பகிர்வதற்கு முன்பாக யோசித்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது அதுதொடர்பான தகவல் உண்மையானதா என்பதை இணையதளத்தில் தேடி சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு தகவலை உறுதிப்படுத்த செய்தி இணையதளங்களை பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி இணையதளங்களில் அந்த தகவல் இருந்தால் அது உண்மையானதாக இருக்க வாய்ப்புள்ளது. நம்பவே முடியாத தகவல், செய்தியாக இருந்தால் பெரும்பாலும் அது தவறான தகவலாகவே இருக்க வாய்ப்புள்ளது. அதன் உண்மைத் தன்மையே வேறு இடத்தில் சோதித்து அறிய வேண்டும். அச்சுறுத்தும் மற்றும் கோபப்படுத்தும் நோக்கோடு ஒரு தகவல் பகிரப்பட்டதாக உணர்ந்தால் அதை மற்றவருக்கு பகிரும் முன் இருமுறை யோசிக்க வேண்டியது அவசியம். நமக்கு மிகவும் தெரிந்த இணையதளத்தின் பக்கம்போல சில இணைப்புகள் அனுப்பப்பட்டாலும் அதில் சில எழுத்துகளோ, வார்த்தைகளோ மாறி இருந்தால் அது தவறானதாக இருக்கும். பலமுறை உங்களுக்கு பகிரப்பட்டுள்ளது என்பதற்காக அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறான தகவல்களே பெரும்பாலும் அதிகமாகவும், வேகமாகவும் பரவுகின்றன என என அறிவுரை வழங்கியுள்ளது.

பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை கண்டறிய வாட்ஸ்அப்பில் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, அது பரீசிலனை அடிப்படையில் இயங்கி வருகிறது.செய்தியை பெறுவதற்கு முன்னர் சரிபார்க்க அல்லது உண்மையா என எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் எச்சரிக்கையுடன் செயல்படும். இதற்கான முயற்சிகளில் வாட்ஸ் அப் ஈடுபட்டு உள்ளது. இந்த டூல்ஸ் (Tools) தற்போது முயற்சித்து வருகிறது, விரைவில் பயனர்களுக்கு இது பகிரப்படும்.

மேலும் படிக்க