• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்டோ டிரைவரை தாக்கிய 4 பேர் கைது

February 15, 2022 தண்டோரா குழு

கோவை அடுத்த க.க.சாவடி திருமலையம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுசாமி(59).ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காளியாபுரம் மாகாளியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதேபகுதியை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் பிரசாந்த்(21) என்பவர் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக்கில் வேகமாக சென்றார்.

இதனைப்பார்த்த,ஆறுசாமி அந்த வாலிபரை மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தினார். அப்போது இருவருக்கும்இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே பிரசாந்த் செல்போனில் தனது நண்பர்களை தொடர்பு கொண்டு அங்கு வர சொன்னார்.மேலும் 3 பேர் அங்கு வந்து ஆறுசாமியிடம் பிரச்னை செய்தனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ஆறுசாமியை
தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து, உதைத்துவிட்டு மிரட்டி சென்றனர்.

காயமடைந்த ஆறுசாமி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில், ஆட்டோ டிரைவரை தாக்கிய திருமலையம்பாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பிரசாந்த்(21), அவரது அண்ணன் ஜேசிபி ஆபரேட்டர் சம்பத்குமார்(23), சேதுகுமார்(20), சந்தான கிருஷ்ணன்(22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க