• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை நிலையமான ‘மை டிவிஎஸ்’ கோவையில் துவக்கம்

May 25, 2022 தண்டோரா குழு

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனையில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக கொச்சியை தலைமையாகக் கொண்டு “மை டிவிஎஸ்” Focuz Partsmart Pvt.ltd இயங்கி வருகிறது இது கேரள மாநிலத்தில் 29 கிளைகளையும், கர்நாடகாவில் 3 கிளைகளும், தெலுங்கானா மற்றும் டெல்லியில் தலா ஒரு கிளைகளும் தமிழகத்தில் ஈரோடு, திருச்சி, சேலத்தில் தலா ஒரு கிளைகள் என இந்தியா முழுவதிலும் 38 கிளைகளைக் கொண்டு ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையில் முன்னணியில் திகழ்கின்றது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையில் 44 வருடங்களாக முன்னிலையில் உள்ள இந்த நிறுவனத்தின் 39 வது புதிய கிளை கோவை ராம்நகரில் இனிதே துவங்கியது.myTvs Focuz Partsmart Pvt Ltd நிறுவனத்தின் சிஇஓ ரவீந்திரன் நாயர் முன்னிலை வகித்தார்.கோவை மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன் குத்துவிளக்கு ஏற்றினார்.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாச ராகவன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

மேலும் படிக்க