• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து…. கதையாகிவிட்டது.

March 21, 2016 வெங்கி சதீஷ்

இதுவரை திருடர்களிடம் நகை மற்றும் பணத்தை திருட்டு கொடுத்து வந்த மக்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது காவல்துறையினர் வீடுகளிலேயே கொள்ளையடிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சீலநாயகன்பட்டியில் குடியிருந்து வரும் தர்மபுரி மாவட்ட க்யூ பிரிவு டிஎஸ்பி.,யாக பணியாற்றி வரும் ஹயத்(55) என்பவர் மார்ச் 19ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் நாகூர் சந்தனக்கூடு திரு விழாவிற்கு சென்றுள்ளார். விழா முடிந்து இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டைப் பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகை கொள்கை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த நான்கு மாதங்களுக்குமுன் காவலர்கள் குடியிருப்பில் குடியிருந்த ஆய்வாளர் வீட்டிலேயே கொள்ளை போனதாக எழுந்த புகாரில் அவரது மகளின் காதலனே கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் கடந்த ஓராண்டுக்குள் மட்டும் சேலம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கொள்ளையர்கள் ஒன்று எதற்கும் துணிந்தவர்கலாக இருக்க வேண்டும், அல்லது வெளியூர் காரர்களாக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

மைன்ட் வாய்ஸ்: ஒருவேளை அவங்ககிட்டதான் அதிகமா பணம் இருக்குன்னு திருடனுங்க நெனச்சிருப்பானுன்களோ…………..

மேலும் படிக்க