March 31, 2021
தண்டோரா குழு
கோவை கோல்ட்வின்ஸ் தீபா மில் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஆட்டிசம் அண்ட் பியாண்ட் அமைப்பு உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து ஆட்டிசம் அண்ட் பியாண்ட் அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குனர் தீபா மாலினி கூறுகையில்,
இன்றைய கால கட்டத்தில் உலக அளவில் ஆட்டிசம் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது குறித்து இன்னும் விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது.தற்போது அவசியத்தேவை இந்த பாதிப்புக்கு உட்பட்டவர் எவ்வாறு சீர்படுத்துவது அதற்கு உண்டான வழிமுறைகள், என்ன என்பதை புரிதல் போன்றவற்றை மக்களுக்கும் பெற்றோருக்கும் உணர்த்தப்பட வேண்டும். இதற்கு டாக்டர் கிரீன் ஸ்பேன் அவர்கள் ஆட்டிஸம் குறைபாடுகள் குறித்து பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘FLOUR TIME THERAPY’ ஆட்டிசம் குறைபாடுகளை நீக்க உதவியாக உள்ளது என கருத்தரங்கில் தெரிவித்தார்.
மேலும், இந்த முறையில் பயிற்சிப் பெற்ற குழந்தைகள் மற்றவர்களுடன் நல் புரிதல் உணர்வுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்