• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்சியரிடன் இன்டன்சிப் பயிற்சித் திட்டம் – விண்ணப்பிக்க அழைப்பு

September 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், இளம் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தினை மாணவர்கள், இளம் ஆர்வலர்கள் இடையே வளர்ப்பதற்காகவும் மாவட்ட கலெக்டரின் இன்டன்சிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து இளங்களை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 45 நாட்கள் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். அதே போல் நீண்டகால பயிற்சியாக இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பாக http://coimbatore.nic.in என்ற ஆன்லைன் மூலம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க