• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

August 2, 2019 தண்டோரா குழு

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட 27 வகையான மூலிகை பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மாதங்களில் சிறந்த மாதம் ஆடி மாதம். பெண்களுக்கு உரிய மாதம் என்பதாலும் ஆடி மாதத்தில் விரதம் இருந்தும், பய பக்தியுடன் கடவுளை வணங்குவர். இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மாகளியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டும் மழை வளம் பெற வேண்டியும் மக்கள் நலம் பெறவும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இப்பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட 27 வகையான மூலிகை பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த பழங்கள் அனைத்தும் நாளை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன.அம்மனுக்கு நடந்தேறிய அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் மாகாளி அம்மனை தரிசித்து சென்றனர். மேலும் இச்சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க