May 10, 2018
தண்டோரா குழு
ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்தப்பதவியிலும் இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்பதில் உண்மை இருந்தால் எனக்கு பெருமைதான்.தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்என துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
குருமூர்த்தியை ஆடிட்டர், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் உடையவர் என்று அழைக்கிறார்கள் ஆனால் அவரை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்தப்பதவியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.