February 2, 2018
தண்டோரா குழு
ஆன்லைன் மூலம் ஐபோன் 8 மொபைல் போனுக்கு ஆர்டர் செய்த நபருக்கு துணி துவைக்கும் சோப் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஸ்டிர மாநிலம் நவி மும்பை அருகேயுள்ள பன்வலைச் சேர்ந்தவர் தேம்ராஜ் மெகபூர் நாக்ரலி (26) சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ’ஐபோன் 8’ செல்போன் வாங்க ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்டில், ஆர்டர் செய்துள்ளார்.தனது கார்டு மூலம் அந்த போனுக்கான ரூ.55 ஆயிரத்தைச் செலுத்தினார்.அடுத்த சில நாட்களுக்குப் பிறகு பிளிப்கார்டில் இருந்து அவரது வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது.
ஆசைப்பட்ட ஐபோன் பார்க்க ஆசையாக பார்சலை பிரித்த நாக்ரலி அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், உள்ளே இருந்தது, ’ஐபோன் 8’ அல்ல. ’ஆக்டிவ் வீல்’ என்ற துணி துவைக்கும் சோப்பு தான்.இதனால், ஏமாற்றமடைந்த நாகரலிபிளிப்கார்ட் மீது பைகுல்லா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் கூறியுள்ளது.