• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ஆச்சி மசாலாவுக்கு கேரளாவில் தடையா – ஆச்சி மசாலா நிறுவனம் விளக்கம்..!

September 7, 2019 தண்டோரா குழு

கேரளாவில் தடை என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது என ஆச்சி மசாலா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பூச்சிகொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கபட்டதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் தீயாய் பரவியது. இது தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆச்சி மசாலா நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் ஆச்சி மசாலாவிற்கு தடை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது அது முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஆச்சி மசாலாவின் ஒவ்வொரு தயாரிப்பும், ஒவ்வொரு கட்டத்திலும் பல தரப்பு சோதனைகளுக்கு பிறகு தரத்தை உறுதி செய்தே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவில் எந்த இடத்திலும், எந்தவித தரக்கட்டுப்பாடு சோதனைக்கும் ஆச்சி மசாலா தயாராக இருக்கிறது. ஆச்சியில் தரம் என்பது எப்போதும் நிரந்தரம் என்றும் அதில் சமரசத்திற்கு இடமில்லை என்றும் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆச்சி மசாலாவை கேரளாவில் உபயோகிக்க தடையில்லை என கேரளா food authority நிறுவனம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தவறான வதந்திகளை நம்பாமல் ஆச்சி மசாலா தயாரிப்புகளுக்கு வழக்கம்போல வரவேற்பை அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க