April 17, 2018
தண்டோரா குழு
காஷ்மீரில் கோவிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு கோவை நீதிமன்றம் முன்பாக பெண் வழக்கறிஞர்கள் இன்று(ஏப் 17)ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிமி படுகொலைக்கு நீதி வேண்டும் எனக் கோரி கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக திரண்ட 50 க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும்,சிறுமியின் படுகொலை சம்பவத்தை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தினசரி உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதேபோல் உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறுமி ஆசிபா வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும்,அதை கண்டிப்பதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.