April 17, 2018
தண்டோரா குழு
காஷ்மீரில் கூட்டு பாலியல் செய்து கொல்லபட்ட சிறுமிக்கு நீதி வேண்டி கோவையில் இளம் மகளிர் கிறித்தவ சங்கம் சார்பில் இன்று(ஏப் 17)மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா மாவட்டத்தில் 8வயது சிறுமி கூட்டு பாலியல் செய்து படுகொலை செய்யபட்டார்.இதனை கண்டித்து நாடு முழுவதும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு,ஆர்பாட்டங்களும் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை இளம் மகளிர் கிறிஸ்துவ சங்கத்தினை சேர்ந்த பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள வ.உ.சி மைதானம் அருகே அமைதி வழியில் கைகளில் பதாகைகளை ஏந்திய வண்ணம் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு முன்னதாக இளம் மகளிர் கிறித்தவ சங்க கூட்டரங்கில் கூடிய மகளிர் அனைவரும் ஆசிபாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.