April 17, 2018
தண்டோரா குழு
காஷ்மீரில் 8வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்து கொல்லபட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் சிறுபான்மை பேரவை சார்பில் இன்று(ஏப் 17) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் 8வயது சிறுமி அப்பகுதியில் உள்ள கோவிலில் 8 நாட்கள் அடைத்து வைக்கபட்டு கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யபட்டார்.
இந்த கொடுஞ்செயலை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சிறுபான்மையினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தின் போது இந்துத்துவ அமைப்பினருக்கு எதிராகவும்,மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் கருத்துக்கு கண்டன தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பட்டது.உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.