• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் அருகே செல்பி – போலீசார் இடைநீக்கம்

March 25, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தில் ஆசிட் வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் அருகில் செல்பி எடுத்தக்கொண்ட பெண் போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேஷ மாநிலத்தில் அலகாபாத் லக்னோ இடையே செல்லும் கங்கா கோமதி ரயிலில் 35 வயது பெண் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) பயணம் செய்தார். அவரை ஒரு கும்பல் கற்பழித்து, வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க செய்துள்ளது.

லக்னோ ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், பேச முடியாத காரணத்தால் தன் மீது நடந்த தாக்குதலை காவல்துறையினரிடம் எழுத்து மூலம் புகார் கொடுத்தார்.

“2௦௦8ம் ஆண்டு, தன்னை ஒரு கும்பல் கற்பழித்து, வயிற்றில் ஆசிட் ஊற்றியது. இது போன்ற பல தாக்குதலுக்கு ஆளானேன். இதையடுத்து தனக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக்கொண்டேன். ஆனாலும் எந்த பயனுமில்லை” என்று தன்னுடைய புகாரில் கூறினார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை லுக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க மூன்று பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர். பணியிலிருந்த அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அமர்ந்து சிரித்த படி, செல்பி எடுத்தனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து அம்மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்தும் அவர்கள் நடத்தை குறித்தும் விசாரணை மேற்கொள்ள உத்தரபிரதேஷ காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“இந்த மூவரும் உணர்வற்றவர்கள்” என்று மூத்த காவல் அதிகாரி ஏ. சதீஷ் கணேஷ்” கூறினார்.

இந்நிலையில் உத்தரபிரதேஷ முதலமைச்சர் யோகி ஆதித்யானாத் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்துள்ளார். அந்த பெண்ணை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

உத்தரபிரதேஷ மாநிலம் சமாஜ்வாடி கட்சியின் ஆளுகைக்கீழ் இருந்தபோது, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும், சட்ட ஒழுங்கின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி உத்தரபிரதேஷ் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்யானாத் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க