March 4, 2020
தண்டோரா குழு
மருத்துவப்படிப்பு மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் சேவையாற்றும், தேசிய அளவில் முன்னிலை வகிக்கும் அமைப்பான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம்,உதவித்தொகைத் தேர்வின் 2ம் பதிப்பை அறிவித்துள்ளது. நேஷனல் எலிஜிபிலிட்டி அன்ட் ஸ்காலர்ஷிப் டெஸ்ட் என அழைக்கப்படும் இத்தேர்வில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஆகாஷ் நெஸ்ட், ஏப்ரல் 5ம் தேதி நாட்டின் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும். தேசிய அளவில் போட்டியிடவும், கல்விக் கட்டணத்தில் 90 சதவீதம் வரை உதவித்தொகை பெறவும் நெஸ்ட் தேர்வு வாய்ப்பளிக்கிறது. ஆகாஷ் நெஸ்ட் மூலம்,ஏ.இ.எஸ்.எல் இன் பயிற்சியை நிதித் தடையின்றி மாணவர்கள் பெற்று முன்னேற உதவுவதை ஆகாஷ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸஸ் லிமிடெட் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆகாஷ் சவுத்ரி கூறுகையில்,
கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் மாணவர்கள் இந்த மதிப்புமிக்க, திறமையானவர்களை அடையாளம் காணும், தேர்வுக்கு விண்ணப்பித்துத் தங்கள் கல்வி இலக்கை எட்ட உதவும் இந்தச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
விண்ணப்பப் படிவம் ஏப்ரல் 3, 2020 இறுதி வரை பெறப்படும்.இத்தேர்வுக்கான பதிவுக் கட்டணம் ரூ .200.இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப் பாடங்களில் இருந்து மாணவர்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.