• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல்

July 4, 2019

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர்தவிர இதர 38மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த, தேர்தல் பிரச்சாரத்தில்பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர் துரைமுருகன் மற்றும் அவரது உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 11 கோடி அளவில் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைதேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நாள் : ஜூலை 11, 2019

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூலை 18, 2019

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நாள்:ஜூலை 19, 2019

வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள்:ஜூலை 22, 2019

தேர்தல் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 5, 2019

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 9, 2019

மேலும் படிக்க