• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க.,வை வெட்ககேடாக நினைக்கிறேன் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

January 14, 2023 தண்டோரா குழு

கோவை கணபதியில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

நான் கிராமத்தில் இருந்து வந்து தான் தலைவர் மனைவியாக உங்கள் அண்ணியாக நிற்கிறேன். சின்ன கவுண்டர், வானத்தைப்போல படங்களில் கொங்கு மண்டலத்தை காட்டியது கேப்டன். 40 வருடம் மக்களுக்காக வாழ்ந்தவர் கேப்டன். மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்றவர் கேப்டன். தே.மு.தி.க. நேர்மையான கட்சி, நல்லவர் ஆரம்பித்த கட்சி, என்றும் தவறான வழியில் தேமுதிக செல்லாது. அ.தி.மு.க.,வை வெட்ககேடாக நினைக்கிறேன்.

தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் விழா அதிமுக கொண்டாடவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் கவர்னர் முதன்முறையாக வெளிநடப்பு செய்த நிகழ்வு அது தலைகுனிவு நாளாக கருப்பு தினமாக பதியப்பட்டிருக்கிறது. கவர்னர் சாதித்துக் காட்டிருக்க வேண்டும். கவர்னருக்கு தே.மு.தி.க. கண்டனம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க