• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க.கூட்டணி வெற்றி பெற வேண்டி சாட்டை இல்லாமல் இரண்டு விரல்களால் 234 பம்பரங்களை சுழற்றிய சாதனையாளர்

March 30, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் அ.தி.மு.க.கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி சாட்டை இல்லாமல் இரண்டு விரல்களால் 234 பம்பரங்களை யு.எம்.டி.ராஜா
சுழற்றியுள்ளார்.

பல்வேறு காலகட்டங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான சாதனைகளை நிகழ்த்தியவர் கோவையை சேர்ந்த யு.எம்.டி.ராஜா. இந்நிலையில் இவர்,தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்,அ.தி.மு.க.கூட்டணி வெற்றி பெற வேண்டி 234 பம்பரங்களை சாட்டையில்லாமல் தனது இரண்டு விரல்களால் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

இதற்கான நிகழ்ச்சி கோவைபுதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக சாதனை நிகழ்வை 88 வது வார்டு மேலமைப்பு பிரதிநிதி தேவேந்திரன் மற்றும் அம்மா பேரவை புறநகர் மாவட்ட இணை செயலாளர் கோகுல்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த பம்பரங்களை தனது இரண்டு விரல்களால் லாவகமாக பிடித்து இரண்டு விரல்களால் வலது,இடது புறமாக சுழற்றி விட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

அ.தி.மு.க.தொண்டர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்தால் தமிழகம் முழுவதும் மீண்டும் அ.தி.மு.க. தலைமையில் வெற்றி கூட்டணியாக ஆட்சியமைக்க முடியும் என்பதை வலியுறுத்தி தாம் இந்த சாதனையை செய்துள்ளதாக சாதனையாளர் யு.எம்.டி.ராஜா தெரிவித்தார்.

சாதனை நிகழ்வில் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியின் நிர்வாக அலுவலர் உதயேந்திரன், கராத்தே யூசுப்,வீரா ஸ்டுடியோ கண்ணன் , உட்பட பலர் கலந்து கொண்டு சாதனையாளர் ராஜாவை உற்சாகப்படுத்தினர்.

மேலும் படிக்க