• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஸ்ட்ராஸெனெகாவின் டபாக்லிஃப்ளோசின் மருந்தை, நாள்பட்ட சிறுநீரக சிகிச்சைக்கு பயன்படுத்த ஒப்புதல்

February 11, 2021 தண்டோரா குழு

மூன்றாம் நிலை வரை உள்ள நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, இந்தியாவில், நீரிழிவு எதிர்ப்பு மருந்தான டபாக்லிஃப்ளோசின் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸெனெகா இந்தியா அறிவித்துள்ளது. இந்த அனுமதியின் வாயிலாக இந்தியாவில் உள்ள சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு புதிய நோய் மாத்திரையாக டபாக்லிஃப்ளோசின் 10 மில்லி கிராம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அஸ்ட்ராஸெனெகா இந்தியாவின் மருத்துவ விவகாரங்கள் மற்றும் ஒழுங்குமுறை பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் அனில் குக்ரேஜா கூறுகையில்,

நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தரவில் இந்தப் பிரிவிலேயே முதல் தர மருந்தாக அஸ்ட்ராஸெனெகா வின் டபாக்லிஃப்ளோசின் உள்ளது. டபாக்ளிஃப்ளோசின் ஆய்வு முடிவுகள், டைப் -2 எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கும் அந்த பாதிப்பு இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கும் நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு எனப்படும் சி.கே.டி-யின் பாதிப்பைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டிருப்பது தெரிய வந்தது. டிஏபிஏ- சிகேடி என்ற அந்த ஆய்வு செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் 2020 மார்ச் 30 அன்று உலக அளவில் முடிவுக்கு வந்தது.

இது உலக அளவில் கிட்டத்தட்ட 70 கோடி மக்களை பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பலருக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்தியாவில் சி.கே.டி யின் பாதிப்பு 17.2 சதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகை 100 கோடிக்கும் அதிகமாக உள்ள நிலையில் சி.கே.டி பாதிப்பு அதிகரிப்பது வரும் ஆண்டுகளில் சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். என்றார்.

இந்தியாவில் டிஏபிஏ-சி.கே.டி-யின் தேசிய அளவிலான ஆய்வுத் தலைவர் டாக்டர் தினேஷ் குல்லர் கூறுகையில்,

டைப் 2 எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோயை நிர்வகிப்பதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இதய செயலிழப்பு நோயாளிகளிடமும் போதுமான ஆராய்ச்சி அடிப்படையில் சிறந்த செயல் திறனை எஸ்.பி.எல்.டி 2 இன்ஹிபிட்டரான டபாக்லிஃப்ளோசின் வழங்கியுள்ளது. நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் அல்லாதவர்கள் மத்தியில் நாள்பட்ட சிறுநீரக நோய்த் தாக்கத்தைக் குறைக்க இதை இப்போது பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படலாம். நீரிழிவு நோய்க்கான திறமையான மருத்துவ மேலாண்மை மற்றும் இந்தியாவில் அதன் சிக்கல்களைக் களைவதில் இது நீண்ட தூரம் செல்லும். இந்தியாவில் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதன் மூலம் சி.கே.டி உள்ள, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு அல்லாத நோயாளிகள் பயன்பெறுவார்கள். ஏற்கனவே இந்த நோய் பாதிப்பில் இருந்து கணிசமாக குணம் அடைந்தவர்கள் உட்பட அனைவருக்குமே பயன் உள்ளதாக இது இருக்கும் என்றார்.

மேலும் படிக்க