December 18, 2020
தண்டோரா குழு
கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதனிடையே பீளமேடு பகுதியில் உள்ள அவினாசி சாலையில் மேம்பாலப் பணிகள் முதல் கட்டமாக துவங்கி பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக சாலையின் நடுப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் அகற்றப்பட்டன. இதனால் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இப்பகுதியில் மின்விளக்குகளை அமைத்து தர வேண்டி பீளமேடு பகுதி ம.தி.மு.க செயலாளர் வெள்ளியங்கிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அம்மனுவில், மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்கில் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. மேம்பால பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் மின்விளக்குகள் அப்பகுதியில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.