தேசியத்தர மதிப்பீட்டு அளவுகோல்களை வளர்க்கும் அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் எனும் தேசியக் கருத்தரங்கில் உத்தரபிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.
கோவையில் செயல்பட்டு வரும் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம் தேசிய அளவில் தேசிய தர மதிப்பீட்டில் முன்னிலை பெற்ற கல்வி நிறுவனமாக சிறந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையி்ல், தேசியத்தர மதிப்பீட்டு அளவுகோல்களை வளர்க்கும் அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
அவினாசிலிங்கம் மனையியல்மற்றும் மகளிர் உயர்கல்விநிறுவனத்தின் வேந்தர் பேராசிரியர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இதில், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்தி பென்படேல் கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருவதாகவும்,நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியம் என குறிப்பிட்டார். கருத்தரங்கில்கல்வியின் மேன்மை,பாடத்திட்ட அம்சங்கள் , கற்பித்தல் கற்றல் மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சி , கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கம் , உள்கட்டமைப்பு தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் மேலாண்மை , என. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்தத் தொழில்நுட்ப அமர்வுகள் , என்ற நோக்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதன் துவக்க நிகழ்ச்சியில்,துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் ,முன்னாள் வேந்தர் குழந்தை வேலு,பதிவாளர் கவுசல்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்