• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அவிநாசி சாலையில் 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மேம்பால பணிகள் அமைத்திட பூமி பூஜை !

December 3, 2020 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் 10.10 கிலோமீட்டர் தூரத்திற்கு 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம். அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜையுடன் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

கோவையில் பிரதான சாலைகளில் மேம்பாலம் பணிகளும் சாலை மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உக்கடம் ஆத்துப்பாலம் சாலை மேம்பாலம், திருச்சி சாலையில் அல்வேர்னியா பள்ளி முதல் ரெயின்போ நிறுத்தம் வரையிலான மேம்பாலம், மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம், ஈச்சனாரி மேம்பாலம் என பல்வேறு இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல தமிழகத்திலேயே மிக நீள உயர்மட்ட மேம்பாலமாக கோவை அவிநாசி சாலையில் 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த பாலத்தை காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். 17.25 மேம்பாலம் நான்குவழி பாலமாக அமைக்கப்படுகிறது. மொத்தம் 304 தாங்கு தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அண்ணா சிலை சந்திப்பு, நவ இந்தியா, ஹோப்ஸ் கல்லூரி, கல்லூரி பீளமேடு சர்வதேச விமான நிலைய பகுதிகளில் வாகனங்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக சாய்வு தள பாதைகள் அமைக்கப்படுகின்றன. ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்ற மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மேம்பால பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விழா மேடையில் பேசுகையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று 2021 எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 10 கி.மீ. பாலம் வேறு எங்கும் கிடையாது. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட உள்ளது எடப்பாடி பழனிசாமி பாசிட்டிவான முதலமைச்சர், கிராமத்தில் இருந்து வந்து பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்து வருகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாரோ எழுதித் தந்ததை பேசுகிறார்.எந்த திட்டம் வந்தாலும் ஸ்டாலின் குறை சொல்கிறார். திமுக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை எனவும், ஸ்டாலின் செய்வது எல்லாம் ஏமாற்று வேலை எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலின் கைதேர்ந்தவர் எனவும், நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் கூறிய அவர், மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் எனத் தெரிவித்தார். 2021 ல் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராவார் எனவும், அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார். பின்னர் கோவையிலிருந்து தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற சுமார் 46 மாணவர்களுக்கு தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஏழு 108 இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களில் பயன்பாடுகளையும் தொடங்கி வைத்தார்.

இதனிடையே அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவினாசி சாலை உயர்மட்ட பாலத்துக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினர். மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றுள்ளது. கிராமத்திலிருந்து வந்த முதலமைச்சர் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துள்ளார். கோவையில் மேம்பால பணிகள் மட்டுமல்லாமல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் இவ்வாறு அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

மேலும் படிக்க